உயிரிழை அமைப்பு மீது களங்கத்தை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்: அமைப்பினர் எச்சரிக்கை
உயிரிழை அமைப்பினர் மீது களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டால் சட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக இயங்கும் உயிரிழை அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றையதினம்(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே உயிரிழை அமைப்பினர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.
நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“உயிரிழை அமைப்பில் இருந்து வெளியேறிய 37 பயனாளிகள் உயிரிழை அமைப்பிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், கிளிநொச்சியில் கடந்த ஜுன் மாதம் ஊடக சந்திப்பினை நிகழ்த்தி உயிரிழை நிர்வாகத்தினர் நிதி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தியிருந்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் உயிரிழை அமைப்பினர் கருத்து தெரிவிக்கும் போது உயிரிழை மீது பரப்பப்பட்ட அநாவசியமான செய்திகளை நம்பி உயிரிழை பயனாளிகளை கைவிட கூடியளவிற்கான அவதூறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளது.
கணக்கறிக்கை ஊடாக உண்மையினை வெளிக்கொண்டு வருகின்றோம்.
உயிரிழை பண்ணை மீது, ஆடு, மாடு, கோழி கொள்வனவில் நிதி மோசடி என குற்றம் சுமத்தியிருந்தார்கள். எனினும் நாம் செய்த ஆய்வின்படி எல்லாமே சரியாக இருக்கின்றது./
பண்ணை செயற்திட்டம் செய்த அமைப்பின் மீதும் அவதூறு சுமத்தியிருந்தார்கள்.
கடந்த ஜுன் மாதம் 8ஆம் திகதி உயிரிழையில் விஷேட கூட்டம் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
அப்போது உப தலைவராக இருந்த பிரபாவின் மீது எமது பயனாளிகள் அவரது நடாத்தை, செயற்பாடுகள் முரணாக இருந்தமையால் அவரை வெளியேற்றும்போது அவர் கொஞ்ச உறுப்பினர்கள் சிலரை வைத்து புதிய நிறுவனம் உருவாக்கவே எமது பயனாளிகளை பிரித்து சென்றுள்ளார்.
எமது அமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற நிதிகள் கையாளப்பட்ட முறைகள் மோசடி என கூறியிருந்தனர். கணக்காய்வு அறிக்கையின்படி மோசடி இடம்பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எமது அமைப்பில் கடந்தகால நிர்வாகம் செய்த தவறுகள் என கூறப்பட்டிருந்தது. கடந்தகால நிர்வாகத்தில் எமக்கு இருந்த தலைவர் உட்பட நிர்வாகத்தினரால் பன்றி பண்ணைக்கு என வரப்பட்ட பணத்தினை முன்னாள் தலைவர் கோணேஸ் அவர்களுடைய கணக்கிற்கு மாற்றப்பட்டது. அது தன்னிச்சையாக எடுத்த முடிவல்ல நிர்வாகம் சேர்ந்து நிர்வாகத்திற்கு bright future international இனால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு அமைவாக மாற்றப்பட்டிருந்தது.
ஆனால் மாற்றப்பட்ட நிதியானது 4 ஆம் மாதம் 7 ஆம் திகதி எமது கணக்கிலக்கத்திற்கு வட்டியுடன் வைக்கப்பட்டுள்ளது. அதனால் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என கூறமுடியாது.
புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களுக்கு அன்பான கோரிக்கை நாங்கள் எப்போதும் ஒரு உயிரிழையாகவே வடக்கு கிழக்காக இணைந்து பயணிப்போம். நீங்களும் எங்களுக்கு முழுமையான ஆதரவினை தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
15 வயதுக்குட்பட்ட சிறுமியை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தி தலைமறைவான சந்தேக நபர்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |