இலங்கையில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு கொவிட் தொற்றுக்குள்ளானால் சட்ட நடவடிக்கை
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்களுக்கு கொவிட் தொற்றினால் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் சட்டத்தை மீறி சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் நபர்கள் தொடர்பில் தகவல் கிடைத்து வருவதாக சங்கத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் ஹோட்டல் அறைகள் அனைத்தும் நிறைந்து காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதென சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாமல் செயற்படும் நபர்கள் சிறு பிள்ளைகளுக்கு உட்பட உரிய முறையில் முகக் கவசம் அணியாமல் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தவறான முறையில் செயற்படும் முறையான மற்றுமொரு கொவிட் அலைக்கு ஏற்பாடு செய்யும் நடவடிக்கை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.