தொல்பொருளை சேதப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அமைச்சர் விதுர
நாட்டில் தொல்பொருளைச் சேதப்படுத்துவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புத்த சாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சேதப்படுத்தல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், இன்று (24.08.2023) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, வடக்கு, கிழக்குப் பகுதிகளில், பல வருடங்களாகத் தொல்பொருள் சின்னங்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றமை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வின்போது, தெரியவந்துள்ளது.
குருந்தூர்மலை விகாரை
தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களைச் சேதப்படுத்துவோருக்கு எதிராக, கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குருந்தூர்மலை விகாரை தொடர்பில், இருவேறு வழக்குகள் இடம்பெறுவதால், அது குறித்து எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




