நக்கில்ஸ் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நக்கில்ஸ் (Knuckles) வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென வனவள பாதுகாப்பு திணைக்களம் (Forest Department of Sri Lanka) தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு நபர்கள் வனப்பகுதியில் சுற்றுலாக்களை ஒழுங்கு செய்து வருவதாக வனப்பாதுகாப்பு ஆணையாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க (Nishantha Edirisinghe) தெரிவித்துள்ளார்.
பயணிகளுக்கானப் பாதையை தவிர்த்து மாற்று பகுதிகளில் சிலர் பயணிப்பதால், அவர்களின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
மேலும், உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளால் வனப்பகுதியின் சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 23 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
