யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மருத்துவ சான்றிதழ் இன்று உணவுப்பொருட்களை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனிநபர் சுகாதாரம் பேணப்படாமை, வெதுப்பகச்சுற்றாடலில் இலையான்கள் பெருகக்கூடிய இடமாக காணப்பட்டமை, உருளைக்கிழங்குகளை உணவுத்தயாரிப்பு பகுதியில் களஞ்சியப்படுத்தியமை, வெதுப்பகப்பொருட்களுடன் தொற்று ஏற்படும் வண்ணம் இரசாயன பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, உட்பட குறைபாடுகள் காணப்பட்ட வெதுப்பக ஒன்றுக்கு எதிராக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை
பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்க்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட குற்றச்சாட்டப்பட்டவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் எச்சரிக்கையுடன் ரூபா 50000 தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ சான்றிதழ் இன்று கையாள்கை செய்தமை, தனிநபர் சுகாதாரம் பேணப்படாமை குடிப்பதற்கும், சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை, சமைத்த மற்றும் சமைக்காத உணவுப்பொருட்களை தொற்று ஏற்படக்கூடிய வகையில் களஞ்சியப்படுத்தியமை, போன்ற குறைபாடுகளுடன் இயங்கிய உணவகம் ஒன்றிற்கு 20000 தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri