ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்றைய தினமும் முன்னிலையாக தவறினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரண்டு முறை அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் எந்தவொரு முறையாக காரணமும் தெரிவிக்காமல் ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவில் முன்னிலையாவதை தவிர்த்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 126 இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அறிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து அறிக்கை அளிப்பதற்காக அவர் முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மூன்றாவது முறையாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.