பட்டலந்த விவகாரம்! நீதிமன்றத்தை நாடும் அநுர தரப்பு
பட்டலந்த வதை முகாம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதியமைச்சர் ருவான் செனரத்(Ruwan Senarath) தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டலந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேர்தலில் அனுகூலம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பட்டலந்த விவகாரம் அரசியல் பழிவாங்கல்களுக்காக கொண்டு வரப்படவில்லை. சிலர் தேர்தலில் அனுகூலம் பெறுவதற்காக பட்டலந்த அறிக்கையை கொண்டு வருவதாக கூறுகின்றனர்.
ஏனென்றால் அவர்கள் தங்கள் அரசியல் வங்குரோத்து நிலையை மூடிமறைக்க விரும்புகின்றார்கள். அதனாலேயே நாம் செய்கின்ற அனைத்தையும் தவறு எனக் கூறுகின்றனர்.
நாம் பட்டலந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தோம். நீதிமன்றம் ஊடாக எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
