தமிழரசுக் கட்சிக்குஆணை தாருங்கள்! கிளிநொச்சியில் சிறீதரன் எம்.பி. வேண்டுகோள்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கத் தமிழ் மக்கள் ஆணை வழங்க வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று தாக்கல் செய்தது.
இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்: ராகேஸ்
முதலாம் இணைப்பு
இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் செலுத்தியுள்ளார்.
குறித்த வேட்பு மனு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எந்த சூழ்நிலையிலும் நீடிக்கப்படாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல்
அதேநேரம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளதுடன், எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கு கடந்த 3ஆம் திகதி முதல் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







