நூற்றுக்கணக்கான பேக்கரிகள் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
பாண் எடை குறைத்து விற்பனை செய்த 453 பேக்கரிகள் மீது வழக்கு தொடர உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி படி விலையை நிர்ணயிக்காத பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என நாடு முழுவதும் கடந்த 5 ஆம் திகதி சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதிகாரசபையின் அவசர தொலைபேசி
இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 453 பேக்கரிகள் மற்றும் கடைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்வார்கள் எனவும் சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோருக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின், 1977 என்ற நுகர்வோர் அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
