லீ குவான் யூ இறந்துவிட்டார் மகாதீர் முகமட் வீட்டிற்கு சென்றுவிட்டார்! விமல்வீரவன்ச
லீ குவான் யூ இறந்துவிட்டார் மகாதீர் முகமட் வீட்டிற்கு சென்றுவிட்டார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச லீகுவான் யூ எனவும் மகிந்த ராஜபக்ச மஹாதீர் முகமட் எனவும் விமல்வீரவன்ச குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
லீ குவான் யூ இறந்துவிட்டார்,மஹாதீர் முகமட் வீட்டிற்கு சென்றுவிட்டார் என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச மக்கள் எதிர்பார்த்தபடி லீ குவான் யூவினதும் மஹாதீர் முகமட்டினதும் திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்காததே தற்போதைய பிரச்சினைகளிற்கும் பின்னடைவுகளிற்கும் காரணம் என தெரிவித்துள்ளார்.
நான் தேர்தலின் போது இதனை தெரிவித்தவேளை இதனை சாத்தியமாக்குவதற்காக அரசாங்கத்திற்குள் கடுமையாக பாடுபட்டேன். அந்த போராட்டம் காரணமாகவே நான் அரசாங்கத்திலிருந்து விலக்கப்பட்டேன். தற்போது வெளியிலிருந்து போராட தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri