புலம்பெயர் தமிழரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படக்கூடிய நிலைமை இருக்கிறது..! விரிவுரையாளர் கணேசமூர்த்தி
புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீட்டிற்கான பாதுகாப்பை உத்தரவாதமாக எழுதி வாங்கிக் கொள்ள முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் பல்வேறு பூச்சாண்டிகளை காட்டி புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யக்கூடிய ஒரு நிலைமை இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனாலும் கூட நம்முடைய சகோதர சமூகங்கள் குறிப்பாக இஸ்லாமிய சமூகம் இந்த வழிமுறையினை நீண்ட காலமாகவே கடைபிடித்து வருகிறது.
எல்லா சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாது
அவர்களது சொத்துக்களும் பெரும்பாலும் எவ்விதமான பாதுகாப்பின்மைக்கு உட்பட்ட சொத்துக்கள் தான். ஆனாலும் கூட அவர்கள் அந்த இடரை தாங்கியிருக்கிறார்கள். ஆகவே எல்லா சொத்துக்களையும் அவ்வாறு கையகப்படுத்த முடியாது.
குறிப்பாக மிகப்பெரிய பெறுமதி கொண்ட சொத்துக்களை கையகப்படுத்த முடியாது. அவ்வாறு மிகப்பெரிய சொத்துக்களில் நீங்கள் முதலீடு செய்கின்ற போது அரசாங்கமே உங்களுடன் உடன்பாடொன்றுக்கு வரும்.
ஏனெனில் அவர்களின் நிலைமை இப்போது இலங்கைக்குள் எப்படியாவது டொலரை கொண்டு வர வேண்டும் என்பதாகவே காணப்படுகிறது. ஆகவே முதலீட்டிற்கான பாதுகாப்பையும் உத்தரவாதமாக எழுதி வாங்கிக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
