ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்க திட்டமிடும் லெபனான் ஜனாதிபதி
இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையால் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பை இந்த ஆண்டு நிராயுதபாணியாக்கப்பட முடியும் என்று நம்புவதாக லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் ஹிஸ்புல்லாவிடம் இருந்து ஆயுதங்கள் திரும்பப் பெறப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவும், இதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன்" என்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற ஜனாதிபதியாக கருதப்படும் ஜோசப் அவுன் தெரிவித்துள்ளார்.
1980களின் முற்பகுதியில் லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பிற்குப் பிறகு ஹிஸ்புல்லா அமைப்பு உருவாக்கப்பட்டது.
அரசியல் மற்றும் இராணுவ சக்தி
மேலும் நாட்டிற்குள் ஒரு வலிமையான போட்டி அரசியல் மற்றும் இராணுவ சக்தியாக குறித்த அமைப்பு வளர்ச்சி அடைந்து.
இந்நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜோசப் அவுன்,
ஹிஸ்புல்லா உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அவர்கள் முதலில் லெபனானியர்கள்.
அந்தக் குழு ஒருபோதும் எதிர்வரும் காலங்களில் லெபனான் இராணுவத்திற்குள் ஒரு தனித்துவமான பிரிவாக செயல்பட அனுமதிக்கப்படாது.
ஹிஸ்புல்லா
ஹிஸ்புல்லாவுடன் பலவீனமான போர்நிறுத்தத்தை சோதித்துப் பார்த்ததில் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல் நான்கு பேரைக் கொன்றது.
இருப்பினும், இந்த செயல்முறையை நிறுத்த பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே செய்ய முடியும்.
நாங்கள் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களைத் திரும்பப் பெற விரும்புகிறோம். ஆனால் ஒரு உள்நாட்டுப் போரை மூட்ட நாங்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
