அமெரிக்க விஜயத்தை ஒத்திவைத்த லெபனான் பிரதமர்
லெபனான் பிரதமர் நவாப் சலாம் அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான தனது முக்கியமான பயணத்தை திடீரென ஒத்திவை வைத்துள்ளார்.
இது குறித்து தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டில் நிலவும் தற்போதைய உள்நாட்டுச் சூழல்களைக் கருத்தில் கொண்டு, பெய்ரூட்டிலிருந்து அரசாங்கப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், வரும் நாட்களில் பிரதமர் சலாம் வாஷிங்டன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டதாக அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தம் தற்போது அமலில் உள்ள போதிலும், லெபனானில் உள்ள ஹிஸ்பொல்லா இலக்குகளை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருவதால் அங்கு பதற்றம் குறையவில்லை.
இத்தகைய சூழலில், இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்கு எதிராக உள்நாட்டில் ஹிஸ்பொல்லா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நாட்டின் பாதுகாப்பையும் நிர்வாகத்தையும் உறுதிப்படுத்த பிரதமர் பெய்ரூட்டிலேயே தங்க முடிவு செய்துள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri