ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கக் கோரி துண்டு பிரசுரம் விநியோகம்
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ். (Jaffna) மத்திய பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
குறித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்று (01.06.2024) மாலை மூன்று மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமஸ்டி அரசியலமைப்பு
இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்போம் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri