அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து! பிறப்பிக்கப்பட்டது உத்தரவு
இலங்கையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
சேவையை தடையின்றி பேணுவதற்காக இவ்வாறு விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே அனைத்து ஊழியர்களும் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன உத்தரவிட்டுள்ளார்.
தபால் சேவையாளர்கள் நேற்று பிற்பகல் 4 மணிமுதல் முதல் அடையாள பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றனர்.
தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
சில கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படும் இந்த பணிப்புறக்கணிப்பானது இன்று நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக்க பண்டார கூறுகையில், தபால் சேவையினை தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றமை, தனியார் ஊடாக தபால் விநியோக சேவையினை முன்னெடுப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் மற்றும் சேவையாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் உள்ள 27,000இற்கும் அதிகமான தபால் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
