இயந்திர ரோபோ கூட கவிதை எழுதுகிறது - உங்களால் முடியாதா!
கற்க கசடற: வழங்குவது uchchi.com
கூகுளைக் கலாய்த்துக் கவிதை எழுதியிருக்கிறது ChatGPT
மனிதர் கண்டு பிடித்த கவிதையை இயந்திரம் எழுதுகிறது – உங்களால் முடியாதா? (கவிதை இலக்கணம் கற்க இங்கே செல்லுங்கள்)
கடந்த ஆண்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ChatGPT தொழினுட்பத்தால் கூகுள் தேடுபொறி நெருக்கடி நிலைக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுக் கருவியான சாட்ஜிபிடி, எதைப்பற்றிக் கேட்டாலும் தெளிவாகவும் ஆழமாகவும் இலக்கணம் பிசகாத ஆங்கிலத்தில் பதில் சொல்கிறது. இவ்வளவு ஏன்? கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஓசை வழுவாமல் கவிதை கூட எழுதுகிறது சாட்ஜிபிடி.
தெரியாத தகவலைத் தேடிச் செல்வோர் இனிமேல் கூகுளுக்குப் பதிலாக ChatGPT இடம் போகும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறார்கள். தேடல் முடிவுகளாக கூகுள் வலைத்தள இணைப்புகளை மட்டுமே தருகிறது.
ChatGPT உங்கள் தேடலுக்கான விடையை மனித மொழியில் எழுதித் தருகிறது. சாட்ஜிபிடியை உருவாக்கியிருக்கும் Open AI நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் பெருமளவு முதலீடு செய்துள்ள நிலையில், இப்போது முன்னிலையில் இருக்கும் கூகுளைப் பின் தள்ளி, மைக்ரோசாப்டின் Bing தேடுபொறி முதல் இடத்துக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய சூழல் பற்றி வேடிக்கையாக ஒரு கவிதை கூறுமாறு ChatGPT செயற்கை நுண்ணறிவுக் கருவியிடம் மைக்ரோசாப்டின் உள்ளக அறிக்கையொன்றில் அண்மையில் கேட்கப்பட்டது. கூகுளின் பாடு இனித் திண்டாட்டம்தான் என்ற பொருள்பட, லிமெரிக் என்ற ஆங்கிலச் செய்யுள் வடிவத்தில் அட்டகாசமான ஒரு கவிதையை அது எழுதியிருக்கிறது.
சாட்ஜிபிடி எழுதிய கவிதை ஏறத்தாழ இப்படி இருக்கிறது:
Bing என்றோர் தேடுபொறி இருந்துச்சு
முன்னேற்றம் இல்லாமல் வருந்திச்சு
ChatGPT வந்துவிட்ட பின்னே
சடுதியாக நகர்ந்ததுபார் முன்னே - அட
கூகுளோட அக்குவேர்தான் அறுந்துச்சு
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கவிதை எழுதும் கலையையும் அதற்கான ஓசை நுட்பத்தையும் மனிதர்களே கண்டு பிடித்தார்கள். இந்தத் திறனை இயந்திரக் கருவிகள் எப்படித் தமதாக்கிக் கொண்டன?
கவிதை எழுதும் திறமை கருவில் வாய்க்கும் திரு என்றல்லவா சொல்லி வந்தார்கள்?
உண்மையில் விடா முயற்சியும் தொடர் பயிற்சியும் இருந்தால் யாரும் எந்த ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளலாம். நீங்களும் கவிதை எழுதலாம். தமிழ் மரபுக் கவிதை இலக்கணத்தில் தேர்ச்சி பெறுவதற்கும் மெட்டுக்குப் பாட்டெழுதப் பழகுவதற்கும் இணையத்திலேயே வழி உண்டு என்பதை அறிவீர்களா? ஆம்! Uchchi.com இன் ‘யாவர்க்கும் யாப்பிலக்கணம்’ கற்கை நெறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கற்றுப் பயனடைந்த பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் கற்றுப் பயனடையலாம்.