மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்ட14 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 50000 மில்லி லீற்றர் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்களை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை(10.02.2026) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஆரையம்பதியில் இருவர் மற்றும் மாவிலங்க துறையை சேர்ந்த ஒருவருமாக இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
14 லட்சம் மில்லி லீற்றர் கோடா 50 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பு கோடா பரல்கள், கசிப்பு வடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கலன்களும் மீட்கப்பட்டதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam