பிரித்தானியாவில் காணாமல்போன இளம் யுவதி - மூன்றரை வருடங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள்
பிரித்தானியாவில் காணாமல் போன இளம் யுவதி ஒருவரை தேடும் பொலிஸார், குறித்த யுவதியை கடைசியாகப் பார்த்த இடத்திலிருந்து அரை மைல் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் மனித எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
19 வயதான லியா க்ரூச்சர் 2019ம் ஆண்டு பெப்ரவரி 15ம் திகதி அன்று பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள மில்டன் கெய்ன்ஸில் காணாமல் போனார். இதனையடுத்து மூன்றரை வருடங்கள் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் மேலும் ஆய்வு செய்யும் அதிகாரிகள்
இந்நிலையில், திங்கட்கிழமை பொது மகள் ஒருவர் வழங்கிய தகவலின் பேரில் வீடு ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மில்டன் கெய்ன்ஸின் ஃபர்ஸ்டன் பகுதியில் உள்ள லாக்ஸ்பியர் டிரைவில் உள்ள வீட்டில் அதிகாரிகள் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
க்ரூச்சர் வேலைக்கு நடந்து செல்லும் போது காணாமல் போனார். அவரை கடைசியாக காலை 8.15 மணியளவில் Buzzacott Lane இல் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பெண் தொடர்பான தேடுதலை மிகவும் கடினமான காட்சி என்று விவரித்த துப்பறியும் தலைமை கண்காணிப்பாளர் இயன் ஹன்டர் ஒரு கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
4,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் விசாரணை
தடயவியல் பரிசோதனை தொடர்கிறது. இறந்தவரை முறையாக அடையாளம் காண சிறிது காலம் ஆகலாம்" என்று காவல்துறை அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
2019 முதல் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர், 1,200 மணிநேர சிசிடிவியை ஆராய்ந்து, 4,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
சிறப்பு தேடுதல் குழுக்கள், பொலிஸார், மோப்ப நாய்கள், கடல் பிரிவு மற்றும் தேசிய பொலிஸ் விமான சேவை ஆகியவை விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே, லியா காணாமல்போன ஒன்பது மாதங்களுக்குப் பிறகு - க்ரூச்சரின் சகோதரர் ஹெய்டன் நவம்பர் 2019 இல் 24 வயதில் உயிரிழந்துள்ளார்.
அவரது சகோதரி காணாமல் போனதை அடுத்து அவர் மிகவும் கடினமான மனநிலையில் இருந்ததாக யுவதியின் தாயார் தெரிவித்துள்ளார்.