கத்தோலிக்க இளைஞர் யுவதிகள் இணைந்து போராட்டம் முன்னெடுப்பு (Video)
புதிய இணைப்பு
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது தற்பொழுது காலிமுகத்திடலை நோக்கி நகர்ந்த வண்ணமுள்ளது.
இப்பேரணியில் பெரும்திரளான இளைஞர் யுவதிகள் பதாதைகளை ஏந்தியவண்ணம் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயத்துக்கு முன்பாக கத்தோலிக்க இளைஞர், யுவதிகள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அவர்களுடன் கத்தோலிக்க திருச்சபையில் பல ஆலய பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தைகள் இளைஞர் யுவதிகள் ஒன்று கூடியுள்ளனர்.
அரசாங்கத்துக்கு எதிராகவும் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு நீதி கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புனித லூசியாஸ் தேவாலயத்தின் முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி காலிமுகத்திடலுக்கு செல்வதற்கு ஆயுத்தமாகி வருகிறது.







பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
