இருவேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி போராட்டம்
அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணியால் கினிகத்தேனை நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. .
இன்று (22) இடம்பெற்ற இவ் எதிர்ப்பு ஆர்ப்பாடத்தின்போது போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
" மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மரத்தில் இருந்து விழுந்தவரை மாடு முட்டுவதுபோல, எரிபொருட்களின் விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தீர்மானத்தை அரசு மீளப்பெற வேண்டும். அதேபோல முன்னறிவிப்பு, முன்னேற்பாடுகள் இன்றி இரசாயன உரப்பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளைச்சல்களும் அதிகரித்து வருகின்றன. எனவே, இதற்கான பொறிமுறையை அரசாங்கம் உடன் வகுக்க வேண்டும்." எனவும் வலியுறுத்தியுள்ளனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் ஜே.வி.பியின் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜே.வி.பியனரால் முன்னெடுக்கப்படும் குறித்த எதிர்ப்பு நடவடிக்கை நாளைய தினமும்
நாட்டில் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.




எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri