கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது
கம்பஹா பிரதேசத்தில் பாதாள உலக கும்பலின் தலைவரான “பஸ் பொட்டா” வை சுட்டுக்கொலை செய்துவிட்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்த துப்பாக்கிதாரி மீண்டும் நாடு திரும்பியதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை (10) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, கிம்புலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கம்பஹா பிரதேசத்தில் பாதாள உலக கும்பலின் தலைவரான “பஸ் பொட்டா” வை சுட்டுக் கொலை செய்துவிட்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இவர் இன்று (10) காலை 06.07 மணியளவில் சார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக கம்பஹா நீதிமன்றினால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam