சட்டத்தரணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய விசேட ஏற்பாடு
சட்டத்தரணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சட்டத்தரணிகள் தங்கள் தொழில்முறை கடமைகளை நிறைவேற்றும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புலனாய்வுப் பிரிவு அறிக்கைகளின் அடிப்படையில் சட்டத்தரணிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடிய சட்டத்தரணிகளின் பாதுகாப்பிற்காக ஏற்கனவே தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், உளவுத்துறை அறிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையில் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்ட மற்றும் நீதித்துறை சார்ந்த அதிகாரிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam