பெண் உரிமைகள் தொடர்பில் சட்டத்தரணி சபியா விளக்கம்
சமூகத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் பெண்ணுரிமைகள் உயிர்ப்போடு இருக்கிறதா இல்லையா என்பதை மதிப்பிட முடியும் என சட்டத்தரணி எஸ்.எப்.சபியா தெரிவித்துள்ளார்.
தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வளமான எதிர்காலத்தை வடிவமைத்து முன்மாதிரியாகத் திகழும் மகளிரைப் பாராட்டி ஊக்கமளிக்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று (27.03.2024) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பெண் உரிமைகள்
மேலும் தெரிவிக்கையில், “ஆண்களைப்போலவே பெண்களுக்கும் சந்தோசமும் நிம்மதியும் தேவை. இந்த இரண்டும் பெண்களுக்குக் கிடைக்க வேண்டுமாக இருந்தால் பெண்ணுரிமைகள் முழுமையாக நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
தான் விரும்பும் ஒரு செயலைச் செய்வதற்குரிய உரிமையும் தான் விரும்பாத ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதற்கு உள்ள உரிமையும் ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும். ஆகவே பெண்ணுரிமைகளாக இவையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

பெண்கள் தங்களுக்குரிய உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளக் கூடிய வகையில் உள்ள மிகப் பெரிய ஆயுதம் கல்வியாகும்.
ஒரு பெண் சீரிய கல்வியைக் கற்று உயர்ந்த ஸ்தானத்தை அடைவாளாக இருந்தால் அவள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் முகம் கொடுத்து வெற்றி கொண்டு வீறுநடை போட முடியும்.
பல்வேறு தடைகள் சூழ்நிலைகளின் நிமித்தம் கல்வி அறிவைப் பெற்றுக் கொள்ளாத ஒரு பெண்ணால் எவ்வாறு சமூக சவால்களை எதிர்கொள்ள முடியும் பெண்ணுரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்ற கேள்வி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் உடல் ஆரோக்கியத்துக்கான வழிவகைள் பற்றியும் நோய்கள் பற்றியும் தெளிவுகள் வழங்கப்பட்டதோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை சிறந்த சுயதொழில் முயற்சியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த முன்மாதிரி ஆற்றல் மிக்க பெண்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் தலைமை வகித்த இந்நிகழ்வில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம், மூதூர் பிரதேச சபைச் செயலாளர் எஸ். சத்தியசோதி, சட்டத்தரணி ஏ.எப். ஷிபா, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார்இ பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் என். சிபாதா பானு உட்பட பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், மகளிர்சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam