கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு! சட்டத்தரணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும், சந்தேகநபரான கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை, மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதிபெறப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (05) கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இதனை அறிவித்துள்ளது.
உதவிய பெண் சட்டத்தரணி
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி பெறப்பட்ட தடுத்து வைப்பு உத்தரவு நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மீண்டும் 90 நாட்கள் தடுத்து வைப்பு உத்தரவு பெறப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக் குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைதான இஷாரா செவ்வந்தி வழங்கி வரும் வாக்குமூலத்தின் பிரகாரம் கைத்துப்பாக்கியை சட்டக்கோவை நூல் ஒன்றில் மறைத்துக் கொண்டு, செவ்வந்தி நீதிமன்றம் வருவதற்கு இந்த பெண் சட்டத்தரணி உதவி செய்த குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.