கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞர் விளக்கமறியல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி தமரா குமாரி அபேயரத்னவுக்கு விளக்கமறியல் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று(27.04.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தமராவுக்கு விளக்கமறியல்
இதன்படி, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி தமரா குமாரி அபேயரத்னவை மே 7 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரது விளக்கமறியல் உத்தரவு காலாவதியானதைத் தொடர்ந்து, சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan