கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்: பனாகொடை இராணுவ சம்பளப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தொடர்பான அறிக்கையொன்று பனாகொடை இராணுவ சம்பளப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
சட்டம் நடைமுறை
மித்தெனியவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவரும், கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடைய ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இல்லாமல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி அன்று இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டவர்.
இராணுவத்திலிருந்து விடுவிப்பு
குறித்த நபர் 2024 மே மாதத்தில் பொது மன்னிப்பின் கீழ் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான உண்மைகளை சரிபார்க்க, இந்த அறிக்கை பனாகொடையில் உள்ள இராணுவ சம்பளப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
