இலங்கை சட்டக் கல்லூரி பரீட்சை விவகாரம்! நாடாளுமன்றில் வாக்கெடுப்பில் தோல்வி
இலங்கை சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கில மொழிமூலத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தன.
නීති අධ්යාපන සභා ආඥාපනත යටතේ රීති (276 අධිකාරය වූ) සම්බන්ධයෙන් ඡන්ද විමසීමේදී මන්ත්රීවරු 113 විපක්ෂව ඡන්දය දුන් අතර පක්ෂව 1 ඡන්දයක් හිමි විය.
— Parliament of Sri Lanka (@ParliamentLK) March 21, 2023
சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள் தொடர்பான வாக்கெடுப்பில் எதிராக 113 வாக்குகளும், ஆதரவாக 1 வாக்கும் பதிவு.
1/2
இதில் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாத்திரம் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
