இலங்கை சட்டக் கல்லூரி பரீட்சை விவகாரம்!முறியடிக்க நாடாளுமன்றத்தில் ஒன்றிணையுமாறு வலியுறுத்து
இலங்கை சட்டக் கல்லூரியில் பரீட்சைக்கு ஆங்கிலத்தைக் கட்டாயமாக்கும் நடவடிக்கையை முறியடிக்க நாடாளுமன்றத்தில் ஒன்றிணையுமாறு வலியுறுத்தி தனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட, பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சிங்களம் மற்றும் தமிழில் கல்வி கற்ற மாணவர்களுக்கு சட்டக் கல்லூரியின் கதவுகளை மூடும் நோக்கில இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக வலேபொட தெரிவித்துள்ளார்.
நீண்டகால உத்தியின் ஒரு பகுதியே
நாட்டின் சட்டத்துறை ஒரு குறிப்பிட்ட உயரடுக்கினரின் கைகளில் விழுவதை உறுதி செய்வதற்கான நீண்டகால உத்தியின் ஒரு பகுதியே இந்த முடிவு என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு
சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றத்தின் அமைச்சர்கள் குழு, பரீட்சை மொழியாக
ஆங்கிலத்தை சட்டக் கல்வி சபை தேர்ந்தெடுத்த தீர்மானத்தில் தாம் உடன்படவில்லை
என்று கூறியுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 17 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
