சிறுவர்கள் தொடர்பில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்
பிள்ளைகளுக்கு, உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டம் விரைவாக நிறைவேற்றப்படும் என்று இலங்கையின் நீதி, அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (8) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீதி, அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,தண்டனை என்பது, ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்
வன்முறையே பிரச்சினைகளை தீர்க்கும் என்று பிள்ளைகளும் நம்பினால், அவர்கள் அந்த நம்பிக்கையை, தாம் பெரியவர்களாக வளர்ந்தபின் முன்னெடுத்துச் செல்வார்கள்.
இந்தநிலையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் பலர், பிரச்சினையான குடும்பங்களிலிருந்து உருவாகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.
இந்த நிலையில், வழி தவறும் பிள்ளையை சரிசெய்வது எளிது, ஆனால் வழி தவறிய பெரியவரை சரிசெய்வது கடினம் என்றும் நீதி, அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
