யாழில் பொலிஸ் அதிகாரியின் மகன் இலஞ்சம் பெற்ற விவகாரம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை
யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவாகி இருந்தது.
முறைப்பாட்டினை செய்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் வாகனம் செலுத்தி சென்ற போது யாழ்ப்பாணம் பொலிஸாரினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இலஞ்சம்
இந்நிலையில் குறித்த வழக்கினை இல்லாது செய்வதற்காக யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றிருந்தார்.

இருப்பினும் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் முறைப்பாட்டாளருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பொலிஸார் குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.
இடமாற்றம்
இந்த விடயமானது நேற்றையதினம் (7) மீண்டும் ஊடகங்களில் பேசுபொருளாகியது. இவ்வாறான பின்னணியில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் முல்லைத்தீவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபாலவினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri