லவக்குமாரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மீண்டும் விசாரணை
வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட பணம் தொடர்பில் தன்னிடம் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் இரண்டு மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் குசுமுத்து விமலசேன லவக்குமார் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு காலத்திற்குள் என்னுடைய ஒரு உறவினர் வெளிநாட்டிலிருந்து 41000 ரூபாய் பணம் எனக்கு அனுப்பி இருந்தார்.
இந்த பணம் எனக்கு எதற்காக அனுப்பப்பட்டது, என என்னிடம் இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் அதிகமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது என அவர் கூறியுள்ளார்.
இது இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
பயங்கரவாத தடுப்பு பிரிவு
“2021 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைந்து நாங்கள் நினைவேந்தல் செய்தபோது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஆறு மாத காலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்.
அதன் பின்னராக 2021 ஆம் ஆண்டு 12 ஆம் மாசம் 8 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு 03 மாதம் 25 ஆம் திதி நாங்கள் சட்டமா அதிபரிடம் இருந்து வந்த ஆலோசனைக்கு அமைவாக நாங்கள் அந்த வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டோம்.
அதன் பின்னர் கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டு இரண்டாம் மாசம் 24 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவு பிரிவினரால் மட்டக்களப்பு காரிய ஆலயத்திற்கு நான் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தேன்.
வாழச்சேனை பொலிஸார்
இந்நிலையில் புதன்கிழமையன்று(18.02.2025) வாழச்சேனை பொலிஸாரால் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என்னை விசாரிப்பதற்காக அழைப்பை விடுத்திருக்கிறார்கள் என்று தமிழிலும், சிங்களத்திலும் அதற்குரிய அழைப்பு கட்டளைகளை எனக்கு வழங்கியிருந்தார்.
அதன் நிமித்தம் வியாழக்கிழமை(20.02.2025) காலை 9 மணிக்கு நான் மட்டக்களப்பில் இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் காரியலயத்திற்கு சென்றிருந்தேன்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவவில்லையென்றாலும் நாம் உதவவேண்டும்: பிரித்தானிய முன்னாள் ராணுவத் தளபதி News Lankasri
