ஆப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சி: நவீன உலகின் அடுத்தகட்ட பரிணாமம்
கடந்த சில ஆண்டுகளாக மக்களின் எதிர்பார்ப்பை போதியளவு பூர்த்தி செய்யாத ஆப்பிள் இந்த வருடம் தொழில்நுட்பத்தின் புதிய பரிமானத்தை காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
அந்தவகையில் ஆப்பிள் விஷன் ப்ரோ Apple Vision Pro எனும் நவீன ரக கருவி ஒன்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Apple Vision Pro குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்வதற்கு முதல் இரண்டு முக்கியமான விஷயத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஆகுமென்டெட் ரியாலிட்டி (Augmented reality) என்றால் நிஜ உலகில் நிஜ திரை எதும் இல்லாமல் உங்கள் கண்களுக்கு மட்டும் ஒரு டிஜிட்டல் திரை காட்டப்படும், அதில் உங்களுக்கு தேவையானவற்றை பயன்படுத்தலாம்.
Welcome to the era of spatial computing with Apple Vision Pro. You’ve never seen anything like this before! pic.twitter.com/PEIxKNpXBs
— Tim Cook (@tim_cook) June 5, 2023
3d கேமரா
மற்றொன்று Spatial computing, மேலே கூறப்பட்ட ஆகுமென்ட் ரியாலிட்டி திரையை தலை அசைவு, கை அசைவு, பேச்சு முலம்(voice comment) ஆகியவற்றின் மூலம் இயங்கும் தொழில்நுட்பம்.
ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) கருவி என்பது ஒரு ஹெட் செட்(headset) போன்றது, இதை வைத்துக்கொண்டு ஒரு கம்பியூட்டர் ஸ்கிரீனில் செய்யும் அனைத்தையும் ஹெட்செட் (headset) வாயிலாக செய்ய முடியும்.
இது மட்டுமல்லாமல் ஒரு படத்தை 250 இன்ச் திரையில் பார்க்க முடியும். அனைத்தையும் விட இந்த கருவியை கை அசைவு, கண்கள், வாய்ஸ் வாயிலாக கட்டுப்படுத்த முடியும். Apple Vision Pro -வில் 3d கேமரா உள்ளது,
இதை வைத்து நீங்கள் சேமிக்க வேண்டிய முக்கியமான தருணத்தை 3d முறையில் படம் பிடிக்க முடியும். இதனால் நிஜத்தில் நடப்பது போலவே இருக்கும். இந்த புரட்சிகரமான கருவி சுமார் 3499 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.
மேலும் இந்த கருவி அடுத்த வருட தொடக்கத்தில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் எனவும் அதனைத்தொடர்ந்து ஏனைய நாடுகளுக்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.