லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு
இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் நடைபெறாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தற்போதைய விலைகள் பின்வருமாறு அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயுசிலிண்டர்
12.5 கிலோ எரிவாயுசிலிண்டரின் விலை 3,680ரூபா எனவும், 05 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,477 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறுகையில்,

செப்டம்பர் மாதத்துக்கான உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கப் போவதில்லை.
லிட்ரோ இந்த ஆண்டு இதுவரை நான்கு தொடர்ச்சியான விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளது,
மேலும் 12.5 கிலோ சிலிண்டரின் விலை 2,892 ரூபா எனவும், 5 கிலோ சிலிண்டர் 1,198 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டது.
[2Q5L8F1 ]
[VW42CWU ]
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan