இந்திய இசைக்குயிலின் உடல் அக்கினியுடன் சங்கமம்! பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி(முதல் தமிழ் பாடல் காணொளி)
புதிய இணைப்பு
பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் சற்றுமுன்னர் தகனம் செய்யப்பட்டுள்ளது.
லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், சிவாஜி பார்க்கில் கொண்டு வரப்பட்ட லதா மங்கேஷ்கர் உடலுக்கு மந்திரிகள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
உயிரிழந்த பிரபல பாடகி லதா மங்கேஸ்கரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறுகின்றன.
மும்பையின் சிவாஜி பூங்காவில் அவரது உடலம் தகனம் செய்யப்படுகிறது.
இதன்போது பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முதலாம் இணைப்பு
இந்திய இசைக்குயில்- லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மராட்டிய அரசாங்கம் அறிவித்துள்ளது..
மேற்கு வங்க அரசாங்கமும் நாளை விடுமுறையை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை தமது 92வது வயதில் காலமானார்.
சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழந்த நிலையில் காலை 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
இதனையடுத்து மங்கேஷ்கரின் உடலம் அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 6.30 மணி அளவில் முழு அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VIDEO: Wrapped in the Tricolour, legendary singer #LataMangeshkar begins her final journey. pic.twitter.com/TinDb2ncoA
— Ravi Kapoor (@RaviKapoor) February 6, 2022
Final rites of #LataMangeshkar to be performed at Shivaji Park, Dadar, Mumbai. Last Journey of Lata Mangeshkar to begin in few minutes. pic.twitter.com/Ppl0EpVltT
— All India Radio News (@airnewsalerts) February 6, 2022
மும்பையில் உள்ள லதா மங்கேஷ்கரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலத்துக்கு திரையுலக முக்கியஸ்தர்கள், விளையாட்டு முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி மும்பை செல்கிறார். இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Goosebumps & tears.
— Charu Pragya?? (@CharuPragya) February 6, 2022
There was no one like you. ??#LataMangeshkar
pic.twitter.com/zUYt0xQFeC
Her voice touched the deepest point of our souls. What a sad day for all of us. #LataMangeshkar ji, we just can't thank you enough.#RIPLataMangeshkar pic.twitter.com/M6jCxnRveq
— Rohit Khilnani (@rohitkhilnani) February 6, 2022
தமிழ் பாடல்களில் லதா மங்கேஸ்கரின் முதல் குரல்
A legend forever?????? #RIPLataji #LataMangeshkar I think this is her first song in Tamil!! From the movie #anand song written by my dad @gangaiamaren composed by my uncle maestro @ilaiyaraaja pic.twitter.com/2V2l7Bdozi
— venkat prabhu (@vp_offl) February 6, 2022



