கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று!(Video)
நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு(20.01.2023) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறவினர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (21.01.2023) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் ஹட்டன் டிக்கோயா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்கு எதிர்ப்பு
இதேவேளை விபத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிக்கோயா நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த கோர வாகன விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
