யாழ். கைத்தொழில் உற்பத்தி கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வு
"Industry Jaffna Edition - 2023" என பெயரிடப்பட்ட கைத்தொழில் உற்பத்தி கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (03.09.2023) காலை 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலைய வளாகத்தில் குறித்த கண்காட்சி நடைபெற்று வருகின்றது.
கைத்தொழில் உற்பத்தி கண்காட்சி
கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்க கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரமும் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் திணைக்களம் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், கைத்தொழில் அதிகார சபை அதிகாரிகள், ஊழியர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கைத்தொழில் உற்பத்தி
கண்காட்சிக்கூடத்தை பார்வையிட்டனர்.
நேற்று முன்தினம் ஆரம்பமான குறித்த கண்காட்சி இன்று (03.09.2023) மாலையுடன் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் கண்காட்சி கூடத்தில் நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தந்த கைத்தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தியுள்ளதுடன் சந்தைப்படுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
