தபால்மூல வாக்கு பதிவாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு
தபால்மூலம் வாக்கு பதிவு செய்யவுள்ளவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது விண்ணப்பங்களை உரிய மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக, வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி திகதி
இதற்கமைய, தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த விண்ணப்பதாரர்கள், ஓகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மேலும், அன்றைய திகதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனையின்றி நிராகரிக்கப்படும் என, தேர்தல் ஆணைக்கு தலைவர் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri