மலிங்கவின் திறமையின் தேடல்! கண்டுபிடிக்கப்பட்ட மட்டக்களப்பின் வேகப்புயல்
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கவின், நாடு முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் பயணத்திற்கான திறந்த அழைப்பை அடுத்து 3500க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
இவர்களில், 350 பேர் குழுவாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது.
மட்டு மைந்தர்
முதல் குழுவிற்கான தேர்வுகள் இன்று(14) சுகததாச மைதானத்திலும் , ஆர் பிரேமதாச மைதானத்திலும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பில் இருந்து ஒரு இளம் வீரராான அழகராஜ் லதுர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தேர்வுகளில் காணப்படும் சிறந்த பந்து வீச்சாளர் குறித்து லசித் மலிங்க கருத்து தெரிவித்தார்.
“இதுவரை நம்மிடம் உள்ள வேகமான பந்து வீச்சாளர் மட்டக்களப்பில் இருக்கிறார்..அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனவே கொழும்புக்கு வெளியே யார் நமக்கு வல்லவர் என்று பார்க்க விரும்பினோம்.
அவர் 126 (மணிக்கு கிலோமீட்டர்) வேகத்தில் பந்து வீசுகிறார். காலப்போக்கில் அவர் தனது வேகத்தை அதிகரிக்கும் திறன் கொண்டவர் என்று நான் நினைக்கிறேன்.அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எனவே இப்போது மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஒருவரைக் கண்டுபிடித்துள்ளோம்.
அதுவும் இப்போது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஊருக்குச் சென்ற பிறகும், நீங்கள் இன்னும் ஃபிட்டாக இருப்பீர்கள், வேகமாக பந்து வீசுவீர்கள். எனவே உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.. நன்றாக பயிற்சி செய்யுங்கள்.. நன்றாக சாப்பிட்டு பலம் பெறுங்கள், அடுத்த முறை நீங்கள் வரும்போது இன்னும் வேகமாக பந்து வீசுங்கள்.” என்று மலிங்க தெரிவித்துள்ளார்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri