இரு குழுக்களுக்கிடையே மோதல் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை-கொட்பே மீன்பிடி கிராமத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு குழுக்களைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் கூறியுள்ளார்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் சீனக்குடா கொட்பே மீன்பிடி கிராமத்தில் வசித்து வரும் 22 வயது 26 வயது மற்றும் 40 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.



