இலங்கை செலுத்தியுள்ள மிகப் பெரிய கடன் தொகை: அமைச்சர் பன்னிலகே
இலங்கை தனது மிகப்பெரிய கடனை கடந்த ஆண்டிலேயே செலுத்தி முடித்துள்ளதாக கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
குருணேகலாவில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி சபை பிரதிநிதிகளுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
கடனை செலுத்தி முடித்த இலங்கை அரசு
மிகப்பெரிய கடன் திருப்பிச் செலுத்தல் 2028ஆம் ஆண்டில் நிகழும் என பலரும் எதிர்பார்த்திருந்த போதிலும், அரசாங்கம் 2025ஆம் ஆண்டிலேயே 3,900 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் தவணையை செலுத்தி முடித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், 2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 2,100 முதல் 2,200 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவிட்ட போதிலும், அரசாங்கம் 1,700 மில்லியன் அமெரிக்க டாலர் உபரியைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
அந்த ஆண்டில் ஈட்டப்பட்ட 29,300 மில்லியன் அமெரிக்க டாலர்களில் சுமார் 27,600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே செலவிடப்பட்டதன் காரணமாக இந்த உபரி ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam