இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல் தொடர்பில் வெளியான தகவல்
இரத்தினபுரி - கஹவத்தையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பெரிய இரத்தினக்கற்கள் என அறியப்படும் 510 கிலோ கிராம் எடையுள்ள அர்னூல் கற்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து மீண்டும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோகிராமிற்கும் அதிகமான எடையுள்ள இரத்தினக்கல் சுவிட்சர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் அதன் அங்கீகாரத்தைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
15 இலட்சத்து 50 ஆயிரம் கரட் பெறுமதியான நீல மாணிக்கக்கல் ஒன்றே கிடைத்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்திருந்தார்.
சர்வதேச சமூகத்தால் நிராகரிப்பு
இந்த இரத்தினக்கல்லை எடுத்துச்சென்ற குழுவினரால் அதனை விற்க முடியாமல் போனமையினால் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
310 கிலோ எடையுள்ள சிறப்பு நீலக்கல் பலாங்கொடை சுரங்கத்தில் 2021 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆசியாவின் ராணி என்று தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் பெயரிடப்பட்டது.
இதன் பின்னர் இந்த இரத்தினம் துபாய்க்கு கண்காட்சிக்காக கொண்டு செல்லப்பட்டு பின்னர் சுவிட்சர்லாந்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் இந்த இரத்தினக்கல் முன்பு சொன்ன அளவுக்கு மதிப்பில்லாததால் சர்வதேச சமூகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
