தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள்
மாத்தறை, தெவுந்தர கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் இரு படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
இலங்கை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்தே குறித்த படகுகளுடன் போதைப்பொருள் தொகையையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிப்படுகிறது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஹெரோயின் ரகத்தை சேர்ந்தது என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட இழுவை படகுகள் மற்றும் அவற்றில் பயணித்தவர்களை மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடற்படையினரும் பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri