மலையகம் நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்; சுகாதார பிரிவினர் விடுத்துள்ள கோரிக்கை
மலர்ந்துள்ள தை பொங்கல் தினத்தினை முன்னிட்டு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மலையகம் நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
புகையிரத நிலைய அதிபர்கள் நேற்றைய தினம் திடீர் (13) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபபட்டதனால் கொழும்புக்கும், பிற நகரங்களுக்கும் தொழிலுக்காக சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதில் சிரமங்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் (14) தொழிற்சங்க போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமையினால் புகையிரதங்கள் ஊடாகவும்,பொது போக்குவரத்து ஊடாகவும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மலையக நகரங்களை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கோவிட் தொற்று உலகம் முழுவதும் தீவிரமாக பரவி உலகை அச்சுறுத்திவருவதனால் சுகாதார வழிமுறைகளை கடுமையாக பின் பற்றி தங்களையும், அயலவர்களையும் பாதுகாத்து கொள்ளுமாறும் மீண்டும் ஒரு முறை நாடு முடக்குவதற்கு இடமளிக்காது நடந்து கொள்ளுமாறும் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தலைநகருக்கு தொழிலுக்காக சென்றவர்கள் தங்களது வீடுகளுக்கு பொங்கலை முன்னிட்டு திரும்புவதற்கு விசேட பஸ் சேவைகளும் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதே வேளை தொடர் விடுமுறை ஒன்று காணப்படுவதனால் சிவனொளிபாதமலையினை தரிசனம் செய்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளி சுற்றுலா பிரயாணிகள் பெரும் எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
இவர்களின் நலன் கருதி ஹட்டன் புகையிரத நிலையத்திலிருந்து நல்லதண்ணீர் வரை இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்களும் தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam
