மேல் மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள பெருந்தொகையிலான பொலிஸார்
நாடாளவிய ரீதியில் நாளையதினம் பயணக்கட்டுப்பாடு நீக்கப்படவுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் 700 வீதித்தடையை பயன்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அதற்காக பொலிஸ் அதிகாரிகள் 8000 பேர் வரையில் தயார் நிலையில் உள்ளார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சிரமமின்றி செயற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஒருவர் செயற்பட்டால் சட்டத்தை அமுல்படுத்தி கைது செய்யப்படுவார்கள்.
எப்படியிருப்பினும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இணையம் ஊடாக ஏனைய சேவைகளை மேற்கொள்ளுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனங்கள் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய செயற்படுகின்றதா என சோதனையிட கொழும்பு உட்பட நகர பகுதிகளில் ட்ரோன் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
