அலரிமாளிகையை முற்றுகையிட்டுள்ள பெருந்திரளான மக்கள்: ஏற்பட்டுள்ள பெரும் பதற்றநிலை (Video)
புதிய இணைப்பு
அலரிமளிகைக்கு முன்னால் தற்பொழுது பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
அரசுக்கு எதிராகக் கொதிப்படைந்த மக்கள் போடப்பட்டிருந்த இரும்பு வீதி தடைகளைத் தகர்த்து முன்னோக்கி நகர முயற்சிக்கிறார்கள்.
அதனை தடுக்கும் வகையில் மேலும் பல பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அலரிமாளிகையை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அலரிமாளிகைக்கு செல்லும் பகுதியானது இப்பொழுது வீதி தடைகள் போடப்பட்டு வழிமறிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பெரும் திரளான மக்கள் விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கைகளில் தேசியக் கொடிகளுடன் வீதி தடை கம்பங்களில் மேல் ஏறி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெருமளவு இராணுவத்தினர், பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.










பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
