குருந்தத்தால் ஆன மிகப்பெரிய நீல இரத்தினக் கல் விற்பனைக்கு!
கொழும்பில் நடைபெறவிருக்கும் இரத்தின மற்றும் நகை கண்காட்சியில், உலகின் மிகப்பெரிய குருந்தத்தால் ஆன நீல இரத்தினக் கல் ஒன்று விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது.
இந்த கண்காட்சி சர்வதேச நிறுவனங்களின் ஏற்பாட்டில் கொழும்பு நவம் மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை வர்த்தக சபை ஏல மண்டபத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (11) நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சி இலங்கையின் இரத்தின வர்த்தகத்தை புத்துயிர் பெறவும், உலக சந்தையில் அதன் நிலையை வலுப்படுத்தவும் நடத்தப்படவுள்ளது.
நியாயமான விலை
மேலும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து பெறப்படும் இரத்தினங்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்காகவும், உள்ளூர் வர்த்தகர்கள் தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளை அணுகுவதற்காகவும் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் மேலாண்மை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரத்தினவியலில் விரிவுரையாளர் ஒருவரால் விற்பனைக்கு வைக்கப்படவுள்ள குருந்தத்தால் ஆன நீல மாணிக்கக் கல்லை ஆய்வு செய்தபோது இந்தக் கல் உலகளாவிய இரத்தினக் கல் வர்த்தக வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிலைநாட்டும் என்று தெரிவித்துள்ளார்.



