வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள மாற்றம்! வெளியான தகவல்
2026 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவு கணிசமாக அதிகரித்திருந்தாலும், சுற்றுலா வருவாய் சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு வாழ் இலங்கையர்களால் கிடைத்த பெருந்தொகை பணம்
இந்த ஆண்டு ஜனவரியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் சுற்றுலாத் துறையிலிருந்து இலங்கை 378.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியதாகவும், இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது சுற்றுலா வருவாயில் 5.6 சதவீதம் குறைவாகும் என்றும் அறிக்கை காட்டுகின்றது.
கடந்த ஆண்டு ஜனவரியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 573 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பி அனுப்பியதாகவும், சுற்றுலாத் துறை கடந்த ஆண்டு ஜனவரியில் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியதாகவும் தெரிவித்துள்ளது.
அந்நியச்செலாவணி முக்கிய ஆதாரம்
கடந்த ஆண்டு, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 8.07 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏராளமான இலங்கை தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இது நாட்டிற்கு அனுப்பப்படும் பணம் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளது. மேலும், நாட்டிற்கு அந்நியச் செலாவணி வருவாயின் முக்கிய ஆதாரம் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அனுப்பும் பணமாகும் என தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் சுற்றுலா வருவாய் 5.6 சதவீதம் குறைந்திருந்தாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை 9.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டு ஜனவரியில் மொத்தம் 277,327 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
ரஜினியுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்னையை சுற்றிய நடிகை.. நேரில் பார்த்த அனிருத்தின் தந்தை Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri