அதிகாலையில் திடீர் சோதனை! யாழ். கடற்பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள்
வடக்கு கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று (27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமந்துறை கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையிலேயே இந்த போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினர் விசாரணை
இதன்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட பிரிவுகளும் இலங்கை கடற்படைக் கப்பல் அக்போ நிறுவனத்தின் ' (SLNS Agbo) அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட படகில் சுமார் 35 கிலோ ஹெரோயினும் , சுமார் 45 கிலோ ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக கடற்படையினர் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

