நாடு திரும்ப முடியாமல் டுபாயில் சிக்கியிருந்த இலங்கையர்கள்! அமைச்சர் நாமல் எடுத்த நடவடிக்கை
நாடு திரும்ப முடியாமல் டுபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் குழுவொன்றினை அமைச்சர் நாமல் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
டுபாய் சென்றுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் குழுவினரை சந்தித்து பேசியுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், “பல்வேறு காரணங்களினால் தாயகம் திரும்ப முடியாத இலங்கை சமூகத்தை சந்தித்ததாக” குறிப்பிட்டுள்ளார்.
Met with LKA community who are unable to reach home due to various difficulties.Glad that together with Hon. @ChanakaDinushan & Hon. Prasanna Ranathunga we were able to assist & make arrangements for them to return to their loved ones. @slcgdxb pic.twitter.com/1XZMt5dsvH
— Namal Rajapaksa (@RajapaksaNamal) March 8, 2021
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் டி.வி.சனகா மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் உதவியுடன், குறித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தாயகம் திரும்ப முடியாத இலங்கையர்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
கோவிட் - 19 பரவல் காரணமாக வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
