இந்திய விமான நிலையத்தில் சிக்கிய லண்டன் வாழ் இலங்கை வர்த்தகர் : ஆள்மாறாட்டம் அம்பலம்
இந்திய விமான நிலையத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் பெங்களுர் விமான நிலையம் ஊடாக பயணிக்க முற்பட்ட வேளையில் 52 மற்றும் 25 வயதான இலங்கைத் தமிழர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் தனித்தனி டிக்கெட்டுகளில் பெங்களூரு கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்திற்குள் நுழைந்துள்ளனர்.
லண்டன் போர்டிங் பஸ்
குடிவரவு மற்றும் பாதுகாப்புச் சோதனைகளைத் தனித்தனியாக முடித்த பிறகு, ஆண்கள் கழிவறையில் வைத்து லண்டன் போர்டிங் பாஸை சருசனிடம் இரகசியமாக வழங்கியுள்ளார்.

பிரித்தானிய பிரஜை விமான நிலையத்தில் இருந்த நிலையில், 25 வயதான மற்றைய இளைஞனின் அவரின் போர்டிங் பாஸினை கொண்டு லண்டன் செல்லும் விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் ஏறியுள்ளார்.
ஆள்மாறாட்டம் அம்பலம்
இதனையடுத்து பெங்களுரில் இருந்து மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்காக 8 மணிநேரம் விமான நிலையத்தில் பிரித்தானிய வாழ் இலங்கையர் காத்திருந்த நிலையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆள்மாறாட்ட மோசடி அம்பலமாகி உள்ளதுடன், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த 25 வயதான இளைஞன் தரையிறங்கிய நிலையில் அங்கு வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.